வறுத்து அரைத்த வஞ்சிரமீன் குழம்பு: தேவையான பொருட்கள்:
வஞ்சிரமீன் 1/2கி,
சின்ன வெங்காயம்- உரித்து 20,
தக்காளி -பெரியது 1,
புளி -பெரிய நெல்லிக்காய் அளவு,
மல்லி தூள் - தேவையான அளவு,
மிளகாய் தூள்-தேவையான அளவு,
மஞ்சள் தூள்- தேவையான அளவு,
தேங்காய் துருவியது- தேவையான அளவு,
பூண்டு_3பல்,
கறிவேப்பிலை-சிறிதளவு,
வெந்தயம்-சிறிதளவு,
கடுகு-சிறிதளவு,
கடலை எண்ணை-தேவையான அளவு,
கல் உப்பு-தேவையான அளவு
செய்முறை:
கடாயில் தேங்காய்,பூண்டு,சிறிதளவு சின்ன வெங்காயம்-, சிறிதளவு கறிவேப்பிலை, மல்லி தூள் சேர்த்து பொன்னிறமாக வறுத்து அரைத்து கொள்ளவும், புளியை கரைத்து அதனுடன் மிளகாய் தூள், அரைத்த மசாலா, மஞ்சள் தூள் சேர்த்து கரைத்து வைக்கவும். மண்சட்டியில் க.எண்ணைய் ஊற்றி வெந்தயம் கடுகு தாளித்து வெங்காயம் தக்காளி வதங்கியதும் கரைத்து வைத்திருக்கும் மசாலா கரைசல் ஊற்றி நன்றாக கொதிக்க வைத்து மசாலா வாசனை போனதும் மீன் உப்பு கறிவேப்பிலை போட்டு நன்றாக வெந்ததும் இறக்கி வைக்கவும்.
- மருமகள் செல்வி