மாமியார் சரோஜாவின் மீன் வருவல் | Fish Fry - Saroja
У вашего броузера проблема в совместимости с HTML5
மீன் வறுவல் செய்வதற்கு தேவையான பொருட்கள்
விழ மீன் அரை கிலோ - Fish 1/2kg
மிளகு 10 கிராம் - Pepper 10g,
சீரகம் 10 கிராம் - Cumins 10g,
வெள்ளை பூண்டு ஒன்று - Garlic - 1
இஞ்சி சிறிதளவு - Ginger Slightly
சாம்பார் வெங்காயம் 50 கிராம் -Small Onion 50grams
புளி சிறிதளவு - Tamarind Slightly
மஞ்சள் தூள் சிறிதளவு - Turmeric Powder Slightly
உப்பு தேவையான அளவு - Salt required amount
எண்ணெய் தேவையான அளவு - Cooking Oil required amount
மீன் வறுவல் செய்முறை
முதலில் மீனை நன்கு சுத்தம் செய்து கழுவி வைத்துக் கொள்ளவும். பிறகு அதில் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து கறிவேப்பிலை கழுவிய தண்ணீரை ஊற்றியும் நன்கு கழுவிக் கொள்ளவும். புளி கரைத்த தண்ணீரை கழுவிய மீனில் தொளித்து விடவும். சீரகம் இஞ்சி பூண்டு மிளகு வெங்காயம் கறிவேப்பிலை கொத்தமல்லி ஆகியவற்றை மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும். கழுவிய மீனில் அரைத்த விழுது அதனுடன் சிறிதளவு மஞ்சள்தூள் சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும் ஒரு தோசை கல்லில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்தவுடன் கலந்து வைத்துள்ள மசாலா மீனை போட்டு பொரித்து எடுத்தால் சுவையான மீன் வறுவல் தயார்