#நாட்டுக் கோழி மசாலா கறி #Nattu Kozhi Masala Curry In Tamil/Nattu Kozhi Kuzhambhu/Chicken Curry
У вашего броузера проблема в совместимости с HTML5
நாட்டுக் கோழி மசாலா கறிக்கு தேவையான பொருட்கள்:
சின்ன சீரகம் 25 கிராம் சின்ன வெங்காயம் 100 கிராம் நல்லெண்ணெய் 100ml பச்சை மிளகாய் 6 மஞ்சள் தூள் தேவையான அளவு தேங்காய் தேவையான அளவு மிளகு 25 கிராம் காஞ்ச மிளகாய் 5 பூண்டு 25 கிராம் கசகசா 10 கிராம் இஞ்சி 50 கிராம் தேவையான அளவு உப்பு
செய்முறை:
கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி அதில் காய்ந்த மிளகாய் 5 போட்டு நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு நறுக்கி வைத்திருக்கும் தேங்காயை கடாயில் போட்டு நன்றாக வறுக்கவும். பிறகு அதில் சின்ன சீரகம் பச்சைமிளகாயை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும் பிறகு அதில் கசகசாவை போட்டு நன்றாக வறுத்துக் கொள்ளவும். பிறகு அதில் மிளகு நறுக்கி வைத்திருக்கும் சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும். பின் பூண்டு காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கிக் கொள்ளவும். வறுத்த கலவையை தண்ணீர் சேர்க்காமல் நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு கடாயில் எண்ணெய் விட்டு வேக வைத்திருக்கும் நாட்டுக்கோழியை அதனுள் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும். பிறகு அதனுள் மஞ்சள் பொடியை சேர்த்து நன்றாக கிளறி கொள்ளவும். பிறகு தேவையான அளவு உப்பு அரைத்து வைத்திருக்கும் மசாலா கலவையில் சேர்த்து நன்றாக கிளறி நன்றாக வேக வைத்து எடுத்தால் சுவையான நாட்டுக்கோழி மசாலா கறி தயார்.