Girl raped and murdered corpse? Police investigation
У вашего броузера проблема в совместимости с HTML5
Girl raped and murdered corpse? Police investigation
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்த கோழிக்கால் நத்தம் செல்லும் வழியில் உள்ள சிந்தம் பளையத்தில் அப்பியாக் காடு பகுதியில் ஆடைகள் கலைந்த நிலையில் மூக்கிலும் வாயிலும் ரத்தம் வடிந்த நிலையில் கிடந்த பெண் பிணம் கற்பழித்து கொலையா? போலீசார் விசாரணை
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்த கோழிக்கால் நத்தம் செல்லும் வழியில் உள்ள ஊர் சிந்தம் பாளையம் இங்குள்ள அருந்ததியர்களின் மாலாக் கோவிலை ஒட்டி உள்ள தனிமையான அப்பியாக் காடு என்ற பகுதிக்கு சிலர் இன்று காலைக்கடன் கழிக்க சென்ற போது ஆடைகள் கலைந்த நிலையில் ஒரு பெண் பிணம் கிடப்பதை கண்டு ஊரக போலீசுக்கு தகவல் கொடுத்தனர் தகவல் அறிந்த ஊரக காவல் நிலைய ஆய்வாளர் ஆரோக்கிய ராஜ் மற்றும் நகர காவல் நிலைய ஆய்வாளர் பாரதி மோகன் தலைமையில் போலீசார் விரைந்து வந்து பார்த்த போது மேலாடை கலைந்தும் மூக்கிலும் வாயிலும்ரத்தம் வழிந்த நிலையில் சுமார் 35 வயத மதிக்கத் தக்க பெண் ஒருவர் இறந்து கிடப்பதையும் அருகில் ஒரு மதுபாட்டில், கொத்து பரோட்டா பொட்டலம் ஒன்று மற்றும் 2 பிளாஸ்டிக் டம்ளர்கள் கிடப்பதை கண்டனர்.
பின்னர் இறந்த கிடப்பது யார் என விசாரித்த போது அந்த பெண் கோழிக்கால் நத்தம் ரோட்டில் உள்ள ஒரு தனியார் நூற்பாலையில் வேலை செய்து வரும் ஆதிலட்சமி வயது 32 என்பதும் கணவனர் இறந்து விட்ட நிலையில் தனது 11 மற்றும் 8வது படிக்கும் இரண்டு மகன்கள் மற்றும் 9வது படிக்கும் ஒரு மகளோடு சிந்தம் பாளையத்தை அடுத்த கொல்லப் பாளையத்தில் வசித்து வருவதும் தெரிய வந்தது.
நேற்று இரவு வேலைக்கு செல்வதாக கூறி விட்டு வீட்டில் இருந்து வந்த்தும் தெரிய வந்தது. பின்னர் ஆதிலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக. திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் இரவு வேலைக்கு மில்லுக்கு செல்வதற்காக வநதவர் தனியான அந்த இடத்திற்கு எப்படி வந்தார் அவரை மிரட்டி கடத்தி வந்தார்களா அல்லது ஏற்கனவே பழக்கத்தில் இருந்த யாருடனாவது வந்தாரா வந்த இடத்தில் இறந்நது எப்படி என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். திருச்செங்கோடு போலீஸ் டிஎஸ்பி ராஜீ சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்தார். மோப்ப நாய் பொய்கை வரவழைக்கப் பட்டது. சம்பவ இடத்தை முகர்ந்த மோப்ப நாய் பொய்கை சுமார் ஒருகிமீ தூரம் தள்ளி இருந்த நூற்பாலை வரை ஓடி நின்றது. இந்த கொலை சம்பவம் சிந்தம் பாளையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
This Video Covered From Namakkal District Reporter (Tamil Nadu) From South Indian Crime Point Weekly. For More Details Pl Visit : http://www.southindiancrimepoint.com/ or http://sicp.co.in or http://sicp.in or https://twitter.com/crimepoint or https://www.facebook.com/crimepoint or http://south-indian-crime-point-tamil-weekly.blogspot.in/