У вашего броузера проблема в совместимости с HTML5
காதுகுத்தி நூதனப் போராட்டம்
திண்டுக்கல்லில் டிஎன்டி திட்டத்தை மீண்டும் அமல்படுத்தக்கோரி சீர்மரபினர் சங்கத்தினர் காதணி பத்திரிக்கை அடித்து காதுகுத்தி நூதனப்போராட்டம்.
திண்டுக்கல் நாகல்நகர் பகுதியில் சீர்மரபினர் நல சங்கம் சார்பாக தமிழக அரசை கண்டித்து நூதன முறையில் ஆர்பாட்டம் நடத்தினர் சீரமைப்பினர் பட்டியலில் 68 சாதியினர் உள்ளனர் இந்த மக்களுக்கு 1979 வரை டிஎன்டி என்ற சாதி சான்றிதழ் வழங்கப்பட்டு வந்தது ஆனால் 30.07.17 அன்று அ.ஆ 1310 ன் மூலம் அதிகாரிகள் மத்திய அரசு பரிந்துரைத்ததாக பொய்யான காரணத்தை கூறி டிஎன்டி என்பதை டிஎன்சி ஆக யாரும் கவனிக்காத நிலையில் இந்த மக்கள் பெற்று வந்த இலவச உயர் கல்வி பறிக்கப்பட்டது. இந்நிலையில் தங்களது கோரிக்கையை பலமுறை தமிழக அரசிடம் எடுத்துறைத்தும் தமிழக அரசு தங்களது கோரிக்கைக்கு காது குத்தும் விதமாகவே தமிழக அரசு செயல்படுவதாகவும் தங்களிடம் இருந்து பறிக்கப்பட்ட அரசு வழங்கப்பட்ட உரிமைகளை மீண்டும் எங்களுக்கு வழங்க வேண்டும் என்று கூறி காது குத்தும் விழா போல் பத்திரிக்கை அடித்து காதுகுத்தி நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினா.; இனியும் தமிழக அரசு தங்களது கோரிக்கை நிராகரிக்கும் பட்சத்தில் தேர்தலை புறக்கணிப்பதாகவும் வன்முறை போராட்டத்தில் ஈடுபடப்போவதாக சீர்மரபினர் சங்கத்தினர் தெரிவித்தனர்.
பேட்டி: கணேசத்தேவர் (சீர்மரபினர் நல சங்க துணைச் பொதுச் செயலாளர்).
This Video Covered From Dindigul District Reporter (Tamil Nadu) From South Indian Crime Point Weekly. For More Details Pl Visit : http://www.southindiancrimepoint.com/ or http://sicp.co.in or http://sicp.in or https://twitter.com/crimepoint or https://www.facebook.com/crimepoint or http://south-indian-crime-point-tamil-weekly.blogspot.in/