Monday, 15 September, 2025г.
russian english deutsch french spanish portuguese czech greek georgian chinese japanese korean indonesian turkish thai uzbek

пример: покупка автомобиля в Запорожье

 

#காது #வளர்க்கும் #கள்ளர் #பண்பாடு & #சோழர்கள் #வரலாறு / Kallar history / cholargal history /

#காது #வளர்க்கும் #கள்ளர் #பண்பாடு & #சோழர்கள் #வரலாறு / Kallar history / cholargal history /У вашего броузера проблема в совместимости с HTML5
இராஜ இராஜ சோழத்தேவர் என்ன குலத்தை சேர்ந்தவர் என்பதை பல ஆய்வாளர்கள் கல்வெட்டு ரீதியாகவும்,இலக்கியரீதியாகவும் பல முறை கள்ளர் இனத்தை சேர்ந்தவர் என்று குறிப்பிட்டும். சில கூட்டத்தினர் அவருடைய குலத்தை தவறாக சித்தரித்து வருகின்றனர். நான் இங்கு கல்வெட்டைப் பற்றியோ,இலக்கியத்தை பற்றியோ பேச போவதில்லை. மாறாக மானுடவியல் ரீதியாக இராஜ இராஜ சோழத்தேவர் எந்த குலத்துடன் சம்பந்தப்படுகிறார் என்பதையே விவரிக்க விரும்புகிறேன். சோழ மன்னர்கள்,தொண்டைமான்களின் சிலையை அனைவரும் உற்று நோக்கினால் அந்த சிலைகளில் உள்ள முக அமைப்பில், காதுகள் மட்டும் தோள்பட்டை தொடும் அளவிற்கு நீளமாக வளர்ந்து அதில் வளையமும் கோர்க்கப்பட்டிருக்கும். இப்படிப்பட்ட காது தோற்றம் கரிகாலச் சோழன் இராஜ இராஜ சோழத்தேவர் கருணாகர தொண்டைமான் வைத்தியலிங்க தொண்டைமான்(பட்டமங்கலம்) என அனைவருக்கும் காதுகள் நீளமாக வளர்ந்திருக்கும். இப்போது அனைவரின் மனதில் எழும்பும் கேள்வி இதற்கும் இப்போது உள்ள குடிகளுக்கும் என்ன சம்பந்தம் என்று எழும்....? கிபி1950வரை தமிழ் சமூகத்தில் கள்ளர் பெருமக்களின் ஆண்கள் தங்களது குழந்தைகள் பிறந்த சில மாதங்களில் காதுகளை துளையிட்டு அதில் பனை ஓலையை சுருட்டி உள்ளே திணித்துவிடுவார்கள். அந்த பனை ஓலை கொஞ்சம் கொஞ்சமாக விரிவடைந்து காதை கிழித்து பெரியதாக வளரும். தோள் பட்டை தொடும் அளவிற்கு வளர்ந்த பின்பு காதில் வலையங்களை தொங்கவிடுவார்கள். மேலும் கள்ளர் குல ஆண்கள் கோவம் உச்சத்திற்கு வரும் போது அந்த காதை இரண்டாக அறுத்துவிடுவதும் வழக்கம். கள்ளர் பெருமக்களின் இந்த வினோத வழக்கத்தை ஆங்கில ஆய்வாளர்கள் மிகவும் வியப்புடன் பதிவு செய்துள்ளனர்...! மேலும் புகைப்பட ஆதாரத்துடன் இரண்டு சிறுவர்கள் நிற்பது போல் படமும் எடுத்துள்ளனர். இந்த காது வளர்க்கும் பழக்கம் தமிழ் சமூகத்தில் கள்ளர் பெருமக்கள் மட்டுமே பின்பற்றுகிறார்கள் என்பது ஆணித்தனமான உண்மை என்பது யாராலும் மறுக்க முடியாது. சோழ,தொண்டைமானர்களின் மானுடவியல் பழக்கத்தை இன்றும் அவர்களின் வழித்தோன்றாலாகிய கள்ளர் பெருமக்கள் பின்பற்றுகிறார்கள் என்பது கொண்டாடப்பட வேண்டிய விடையம். இந்த பதிவை பார்த்தவுடன் சில கூட்டத்தினர் எங்கள் அப்பத்தாவும்,ஆயாவுன் காதில் தண்டட்டி போட்டு காது வளர்ப்பார்கள் என புதுக்கதை ஆரம்பிப்பார்கள். அவர்களுக்கு முன்னெச்சரிக்கையாக சொல்ல விரும்புவது ஆண்கள் வளர்த்தார்களா என்பதே மில்லியன் டாலர் கேள்விகள்........?????? அதே போல் இன்னொரு மானுடவியல் பார்வையாக இன்றும் கள்ளர் பெருமக்கள் பட்டப்பெயர்களான மழவராயர் வங்கார முத்தரையர் நக்கன் காவடியர்(நாய் காவடியர்) காடவராயர் முனையத்திரியர் தென் கொண்டார் சோழங்கராயர் மலையமான் அதியமார் அம்பலார் அருண் மொழித்தேவர் அல்லி நாடாழ்வார் ஆரூராண்டார் ஆற்காட்டரையர் இராசாளியர் இருங்களர் இரும்பரையர் ஈழத்தரையர் உலகுடையார் ஏனாதி கொண்டார் கச்சிராயர் கடாரம் கொண்டார் காடுவெட்டியார் கண்டர் கண்டியர் கத்திரியர் காங்கேயர் காளிங்கராயர் கீருடையார் குச்சிராயர் கூழாக்கியர் கேரளாந்தகன் கொங்கரையர் கொடும்புரையர் கொற்றங்கொண்டார் கொற்றாண்டார் கோனேரின்மை கொண்டார் சந்திரங்கொண்டார் சம்புவராயர் சாளுவர் சிங்கநாடார் சூரக்குடியார் சூரியர் செம்பியர் செம்பிய முத்தரையர் செம்பியரையர் சேதிராயர் சேர்வை சேனாதியார் சோழதேவர் தஞ்சை கோண் தானாதிபதியார் திருவுடைதாங்கியர் துறைகொண்டார் தென்னவன் தொண்டைமான் நெடுங்கொண்டார் படையாட்ச்சியார் பட்டம்கட்டியார் பண்டாரத்தார் பல்லவராயர் பாண்டிராயர் பாலை நாட்டார் பிச்சயர் புலிகொடியார் பேரரையர் பொய்கையாண்டார் பொன்மாரியார் மண்கொண்டார் மலையராயர் மாவலியார் மாளுவராயர் மீனவராயர் முடிகொண்டார் முத்தரையர் மூவரையர் மெய்க்கன் கோபாலர் வங்காரர் வல்லங்கொண்டார் வழுவாட்டியார் வன்னியனார் வாண்டையார் வில்லவராயர் வில்லவத்தரையர் இதில் வரும் பட்டப்பெயர்கள் முறையே சோழர் காலத்து கல்வெட்டுகளிலும்,இலக்கியங்களிலும் அடிபடும் பெயர்கள். இந்த பட்டப்பெயர்கள் முறையே சோழர்களையும் அவர்களுடைய ஆட்சியை ஏற்றுக்கொண்ட குறு நில மன்னர்களும்,சிற்றரசர்களும்,மலையமான் நாட்டு மன்னர்களும்,சோழ நிர்வாகிகளும் தாங்கிய பெயர்களாகும். இந்த பட்டங்கள் எங்களுக்கும் உண்டு என்று கூறும் கூட்டத்தினருக்கு முன்னெச்சரிக்கையாக ஒன்றை கூறுகிறேன். மேற்கோள் காட்டிய அனைத்து பட்டப்பெயர்களும் அரசு ஆவணத்தில் உள்ள பட்டாவில் கள்ளர்களின் பெயருக்கு பின்னால் தாங்கி நிற்கிறது. இந்த பட்டப்பெயர்கள் போக இன்னும் 2000 பட்டங்கள் உள்ளன. இது போக ஏழுகிளை கள்ளர் சீமையில் உள்ள கள்ளர்களுக்கு சோழயான் கிளை என தனியாக ஒரு கிளையே உள்ளது. மேலும் சோழர்களின் கூற்றம்,நாட்டு அமைப்பை இன்றும் கிளை வழிக்கள்ளர்கள் முத்தூற்கூற்றத்தையும்,14 நாட்டு அமைப்பையும் இன்றும் அம்பலம்,சேர்வை பட்டத்தோடு பாதுகாத்து வருகின்றனர். மேலூர்,சிறுகுடி,வெள்ளலூர் நாட்டு கள்ளர்களும் இந்த சோழர்களின் பாகனூர் கூற்றம் மற்றும் நாட்டைமைப்பை அம்பல பட்டத்தோடு பாதுகாத்து வருகிறார்கள். பிறமலைகள்ளர்கள் இன்றும் நாட்டைமைப்பை தன்னரசாக கட்டமைத்து 8 நாடுகளை பாதுகாத்து வருகிறார்கள். மேலும் பிறமலைக்கள்ளர்கள் இன்றும் 8நாட்டுத்தேவர்கள் காதில் பெரிய வளையம் போல் உள்ள கம்பியை தொங்கவிடுகிறார்கள். புதுக்கோட்டையில் இன்றும் மிழலைக்கூற்றம் மற்றும் நாட்டு அமைப்பை பல சோழ மற்றும் பல்லவ படங்களோடு பாதுகாத்து வருகிறார்கள். மேற்கோள் காட்டிய விடயங்களின் மூலம் மானுடவியல் ரீதியாக சோழர்கள் என்பதை கள்ளர்கள் என்பதை எந்த மானுடவியல் ஆய்வாளார்களாலும் மறுக்க முடியாத நெற்றிபொட்டில் ஆதாரங்களுடன் உள்ளது
Мой аккаунт