கலப்பு தீவன தயாரிப்பு குறித்து, கால்நடை பயிற்சி மையத்தில், மாதிரிகள் தயாரிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதில், மலிவாக கிடைக்கும் தீவனங்களான, சோளம், மக்காச்சோளம், கம்பு, ராகி, அரிசி, புண்ணாக்கு, தவிடு, தாது உப்புகள் மற்றும் சமையல் உப்பு ஆகியவை கலந்து தயாரிக்கப்பட்டது. இந்த தீவன மாதிரியை, கறவை மாடுகளுக்கு உணவாக அளித்து, பால் உற்பத்தியின் அளவு கணக்கிடப்பட்டது. இதில், முன்பை காட்டிலும் அதிகளவு பால் உற்பத்தியாவதும், மாடுகள் ஆரோக்கியமாக இருப்பதும் கண்டறியப்பட்டது.
கால்நடை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய அதிகாரிகள் கூறுகையில்,'10 கிலோ கலப்பு தீவனம் தயாரிக்க, நான்கு கிலோ தானியங்கள், மூன்று கிலோ புண்ணாக்கு, 2.75 கிலோ தவிடு, 200 கிராம் தாது உப்பு கலவை மற்றும் 50 கிராம் சமையல் உப்பு ஆகியவற்றை சேர்த்து, பொடியாக அரைத்து, மாடுகளுக்கு உணவாக கொடுக்கலாம்.'தீவன தட்டுப்பாடு ஏற்படும் சமயத்தில், மாடுகளுக்கு உணவாக கொடுப்பதால், சத்துக்குறைபாடு பிரச்னை ஏற்படுவதை பெருமளவு குறைக்க முடியும்.
our channel contact : 8807671279