У вашего броузера проблема в совместимости с HTML5
தஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு விழாவையொட்டி தஞ்சை
வெண்ணாற்றங்கரை இலிருந்து புனிதநீர் நகர்வலம்
தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழாவினை முன்னிட்டு இன்று நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து சேகரிக்கப்பட்ட புனிதநீர் தஞ்சை நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. இன்றும் ஆகம விதிப்படி சமஸ்கிருதத்தில் பூஜைகள் தொடர்கிறது.
உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு வருகிற பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு கடந்த 27ம் தேதி முதல் பூர்வாங்க பூஜைகள் செய்யப்பட்டு தினமும் பல்வேறு பூஜைகள் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து கங்கை, யமுனை, நர்மதை, காவிரி உள்ளிட்ட புண்ணிய நதிகளில் இருந்து புனித நீர் சேகரிக்கப்பட்டு தஞ்சை வெண்ணாற்றங்கரையில் அமைந்துள்ள தஞ்சை புரீஸ்வரர் ஆலயத்தில் வைத்து ஆகம விதிப்படி சமஸ்கிருதத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
ஓதுவார்கள் திருமுறைகளை பாடினர் தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராவ் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார் சிவாச்சாரியார் புனித நீரை தலையில் சுமந்து கோவிலை சுற்றி வந்து பின்னர் யானை மீது அமர்ந்து ஓதுவார்கள் திருமுறை இசை பாட தப்பாட்டம், கோலாட்டம், பெண்கள் முளைப்பாரி எடுத்து நகரின் முக்கிய வீதி வழியாக புனிதநீர் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, பெரிய கோயிலை வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.