நெல்லையில் அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வுக்கான முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
У вашего броузера проблема в совместимости с HTML5
நெல்லை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும், ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு க்கான முதல்நிலைத் தேர்வு நடைபெறுதல் தொடர்பான முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம், மாவட்ட வருவாய் அலுவலர் உமாமகேஸ்வரி தலைமையில் நடைபெற்றது.
நெல்லை மாவட்டத்தில் 76 கல்லூரி மற்றும் பள்ளிகள் என 99 மையங்களில் தேர்வுகள் நடைபெறுகிறது. தேர்வாளர்கள் தேர்வு எழுதுவதற்கு வசதியாக அனைத்து அடிப்படை வசதிகள் தேர்வு மையங்களில் செய்யப்பட்டுள்ளது. காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை தேர்வு நடைபெறும் மையங்களில், தடையின்றி மின்சாரம் வழங்கிடவும் , தேர்வுகளை வீடியோ மூலம் ஒளிப்பதிவு செய்யவும் கூட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.துரைராஜன், டி.என்.பி.எஸ்.சி பிரிவு அலுவலர்கள் திரு.ஏ.வி.ஞானமூர்த்தி, திரு.எம்.சுரேஸ்சுந்தர் மற்றும் பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
http://www.thenellainews.com/