Vijay TV anchor Divyadarshini (DD) to get married in June!
У вашего броузера проблема в совместимости с HTML5
Wedding bells for Vijay TV anchor Divyadarshini (DD) with her friend Srikanth Ravichandran! Divyadarshini (DD) to get marry in june end! பிரபலத் தொலைக்காட்சிச் சேனலான விஜய் டிவியின் மிகப் புகழ் பெற்ற தொகுப்பாளர்களில் ஒருவர் திவ்யதர்ஷினி. டிடி என்று சுருக்கமாக அழைக்கப்படும் திவ்யதர்ஷினி திரைத்துறையைச் சார்ந்தவர்களை விடவும் தமிழக மக்களிடம் மிகப்பிரபலம். இவரது சிரிப்பிற்கே இங்கே எண்ணற்ற ரசிகர்கள் இருக்கின்றனர். விஜய் டி.வி.யில் பிரபலங்களுடன் இவர் தொகுத்துவழங்கும் காபி வித் டிடி நிகழ்ச்சி பட்டி தொட்டியெங்கும் பிரபலமோ பிரபலம். பெரும்பாலான நிகழ்ச்சித் தொகுப்பாளர்களுக்கு முன்மாதிரியாகத் திகழும் டிடி விரைவில் திருமண பந்தத்தில் இணையவுள்ளார். வருகிற ஜூன் மாத இறுதியில் தனது நெருங்கிய நண்பரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரனைக் கரம்பிடிக்கவுள்ளதாகவும், பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணமாக இவர்களது திருமணம் நடைபெறவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். டிடியின் திருமண வாழ்க்கை மிகச் சிறப்பாக அமைய பிளஸ் மீடியா வாழ்த்துகிறது.