У вашего броузера проблема в совместимости с HTML5
இஸ்லாமிய தஃவா சென்டர் குவைத்
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
அல்லாஹ் கூறுகிறான்
وَذَكِّرْفَإِنَّ الذِّكْرَى تَنفَعُ الْمُؤْمِنِينَ
உபதேசம் செய்வீராக! நிச்சயமாக உபதேசம் மூமின்களுக்கு பயனளிக்கும். (அல் குர்ஆன் )
இஸ்லாமிய வழிகாட்டி மையம் 2003ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. (22.07.2011 முதல் இஸ்லாமிய தஃவா சென்டர் (IDC) என பெயர் மாற்றப்பட்டது.)
ஐடிசி(IDC) என குவைத்தில் வசிக்கும் தமிழ் மக்களால் பரவலாக அறியப்படும் நமது ஸ்தாபனம் மார்க்க சேவைகளை மார்க்கம் காட்டிய வழியில் மேற்கொள்ளவே நடத்தப்படுகிறது.
நமது சென்டர் குவைத்தில் வசிக்கும் தமிழ் மக்களின் நலனுக்காகவே தோற்றுவிக்கப்பட்டது. அமைப்பு சார்பின்மையுடன், தனிநபர் வழிபாட்டை முற்றிலும் தரை மட்டமாக்கவேண்டும் என்ற தூய்மையான அடிப்படையுடன் செயல்பட்டு வருகிறது.
மார்க்கத்தின் மூலாதாரங்களான குர்ஆன் சுன்னா ஆகிய இரண்டை விட்டு மக்கள் வெகு தொலைவில் செல்கின்ற அபாயத்தை உணர்ந்து அம்மக்களுக்கு சீரிய வழியினை சிறப்பாக காட்ட வேண்டும் என்ற ஒரே இலட்சியத்தை மையமாக கொண்டே நமது இஸ்லாமிய வழிகாட்டி மையம் எளிமையான பல்வேறு முறைகளில் பிரசாரப் பணிகளை குவைத் மாநகரில் மேற்கொண்டு வருகிறது.
குவைத் அவ்காப் அமைச்சகத்தின் அங்கீகரிக்கப்பட்ட தமிழ் தாவா பிரிவாக செயல்பட்டு வருவதுடன் ஜம்இய்யது இஹ்யாவுத் துராசுல் இஸ்லாமிய்யாவின் ஒப்புதலையும் நமது மையம் பெற்றுள்ளது.
எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே!