பாலக்கரை புனித அந்தோணியார் கோவிலில் இரு தரப்பினர் மோதல் | Tamil | Arasiyal Reporter | AR
У вашего броузера проблема в совместимости с HTML5
திருச்சி பாலக்கரை பகுதியில் உள்ள தர்மநாதபுரத்தில் சுமார் 270வருட பாரம்பரியமிக்க புனித அந்தோணியார் கோவில் உள்ளது. ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி மாதம் 4ம்தேதி கொடி ஏற்றப்பட்டு திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் கடந்த ஆண்டு நடைபெற்ற கமிட்டி தேர்தலில் முன்னாள் தலைவர்கள் தோல்வியுற்ற படியால் புதிய தலைவர்கள் நியமிக்கப்பட்டனர். பின்னர் திருவிழா தொடர்பாக இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக திருச்சி பாலக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதனைத் தொடர்ந்து இந்த புகார் தாசில்தார் விசாரனைக்கு அனுப்பப்பட்டு அவர் விசாரணை மேற்கொண்டார். இதனிடையே இன்று வழக்கத்தை போல கொடியேற்றத்துடன் நடைபெற அனைத்து நடவடிக்கைகளையும் கமிட்டியார் செயல்படுத்தினர். இந்நிலையில் இன்று மாலை 5 மணி அளவில் திடீரென பாலக்கரை பகுதியில் உள்ள பழைய கோவிலை சேர்ந்த பங்குதந்தை ஜோசப் தற்பொழுது திருவிழா நடத்த வேண்டாம், எனக்கு வேலை இருக்கிறது நான் வரமாட்டேன் என கூறி விட்டதாக கூற படுகிறது. எனவே பகுதி பொதுமக்கள் மிகவும் ஆவேசமாக இன்று கட்டாயமாக கொடி ஏற்றப்பட வேண்டும். கமிட்டி நிர்வாகிகள் தயவுசெய்து தலையிட வேண்டாம், பொது மக்களாகிய நாங்கள் இந்த விழாவை கொண்டாடுகிறோம் என்று அங்கு குழுமி இருந்த ஆண்கள், பெண்கள் ஆவேசமாக பேச ஆரம்பித்தனர். அதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு போலீசார் வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் பொது மக்கள் தாங்களகவே கொடி ஏற்றி திருவிழா நடத்துவோம் என தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு காவல் துறை உதவி ஆணையர்கள் ராமச்சந்திரன், மணிகண்டன், பாலமுருகன் ஆகியோர் வந்து பேச்சு வார்த்தை நடத்தினார். ஆனால் பொது மக்கள் தாங்களாகவே திருவிழாவை நடத்தி கொள்வதாக மீண்டும், மீண்டும் வருகின்றனர்.