Thursday, 25 September, 2025г.
russian english deutsch french spanish portuguese czech greek georgian chinese japanese korean indonesian turkish thai uzbek

пример: покупка автомобиля в Запорожье

 

நாட்டு மருந்து சாப்பிட்டால் ஏன் பத்தியம் இருக்க சொல்கிறார்கள்? - healer baskar

நாட்டு மருந்து சாப்பிட்டால்  ஏன் பத்தியம் இருக்க சொல்கிறார்கள்? - healer baskarУ вашего броузера проблема в совместимости с HTML5
#healer_baskar #healer_baskar_latest #healer_baskar_latestspeech #healerbaskar #healerbaskarlatest #healerbaskarlatestspeech கேள்வி எண் : 175 : நாட்டு மருந்து சாப்பிட்டால் ஏன் பத்தியம் இருக்க சொல்கிறார்கள்? பதில் : ஒவ்வொரு நாட்டு மருந்திலும் ஒவ்வொரு மூலிகைகள் இருக்கும். சில மூலிகைகள் சில உணவோடு கலந்தால் வேலை செய்யாது அல்லது விஷமாக மாறும். எனவே நாட்டு மருந்து கொடுக்கும் நபர்கள் சில பொருட்களை, காய்கறிகள், பழங்களை, சுவைகளை சாப்பிடக்கூடாது என்று கூறுவார்கள். அப்படி கூறினால் அதை தயவுசெய்து கடைபிடிக்கவும். ஒருவேளை கடைப்பிடிக்காமல் இருந்தால் விஷமாக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது. அல்லது அந்த மருந்து வேலை செய்யாமல் இருப்பதற்கு வாய்ப்புள்ளது. மருந்து சாப்பிடுவதை நிறுத்திய பிறகு பத்தியம் தேவை இல்லை. நாட்டு மருந்து கொடுக்கும் நபர் ஒரிஜினலா, டூப்ளிகேட்டா என்று கண்டுபிடிக்க வேண்டும் என்றால், அனைத்து மருந்துகளுக்கும் ஒரே பத்தியம் சொன்னால் அவர் டுப்ளிகேட் என்று அர்த்தம். ஒரு வைத்தியர் ஒவ்வொரு மருந்தும் வேறுவேறு பத்தியும் சொல்லி அதற்கான காரணத்தையும் தெளிவாக கூறினால் அவரே ஒரிஜினல் வைத்தியர். யாரோ சொல்லி, எங்கேயோ கேட்டதை, எங்கேயோ படித்தது பத்தியம் என்று சொல்லும் அனைத்து பத்தியமும் சரியானது அல்ல. புரிந்துகொண்டு, அனுபவப்பூர்வமாக, தெளிவாக, அறிவோடு சொல்லும் பத்தியம் மட்டுமே சரியான பத்தியம் ஆகும். பொதுவாக நாட்டு மருந்து கொடுக்கும் பொழுது அகத்திக்கீரை சாப்பிடக் கூடாது என்று பத்தியம் சொல்வார்கள். உடனே நீங்கள் அகத்திக் கீரை உடலுக்கு கெடுதல் என்று தவறாகப் புரிந்து கொள்ளக்கூடாது. அகத்திக் கீரை சாப்பிட்டால் அது உடலிலுள்ள மருந்துகளை, கெமிக்கல்களை வெளியே தள்ளிவிடும். எனவே மருத்துவர் கொடுத்த மருந்து வேலை செய்யாது. எனவேதான் அகத்திக் கீரை சாப்பிடக் கூடாது என்று பத்தியம் கூறுகிறார்கள். எனவே, பல வருடமாக ஆங்கில மருந்து சாப்பிட்டு பக்கவிளைவுகள் உண்டாகி வாழும் நண்பர்கள், தயவுசெய்து அடிக்கடி அகத்திகீரை சாப்பிடுங்கள். அப்போதுதான் மருந்து, மாத்திரையால் உண்டான கழிவுகள் உடம்பில் இருந்து வெளியே செல்லும். கடைசியாக, பத்தியம் என்றால் என்னவென்றால், நோயாளிக்கு கொடுக்கப்படும் மருந்துடன் வேதியல் வினை புரியும் உணவுகளை சாப்பிடக்கூடாது என்று மருத்துவர் கூறும் பரிந்துரையாகும். எனவே, இனிமேல் யாராவது மருந்து கொடுத்து பத்தியம் சொன்னால், அதற்கான சரியான காரணத்தை கேளுங்கள். மருத்துவருக்கு சரியான காரணம் சொல்லத் தெரியவில்லை என்றால் அவர் அனுபவ ரீதியான வைத்தியர் இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். உதாரணமாக கேரட்டை மூலப்பொருளாக வைத்து செய்யப்பட்ட மருந்தை கொடுக்கும் வைத்தியர் ஆரஞ்சு பழம் சாப்பிட கூடாது என்று பத்தியம் சொல்லவேண்டும். ஏனென்றால் கேரட் ஆரஞ்சுப் பழம் இரண்டும் கலந்தால் மருந்து வேலை செய்யாது. பசும்பாலை மூலப்பொருளாக கொண்டு மருந்து கொடுக்கும் வைத்தியர், அண்ணாச்சி பழம் சாப்பிடக் கூடாது என்று பத்தியம் சொல்லவேண்டும். ஏனென்றால் அன்னாச்சி பழமும் பாலும் சேர்த்தால் மருந்து வேலை செய்யாது. ஆரஞ்சுப் பழத்தை மூலப்பொருளாக கொண்டு தயாரித்த மருந்து கொடுக்கும் வைத்தியர் பால் சாப்பிடக் கூடாது என்று பத்தியம் சொல்ல வேண்டும். ஏனென்றால் ஆரஞ்சு பழமும் பாலும் சேர்ந்தால் மருந்து வேலை செய்யாது. வாழை பழத்தை மூலப்பொருளாக கொண்டு உருவாக்கப்படும் மருந்து கொடுக்கும் வைத்தியர் எலுமிச்சை பழம் சாப்பிடக் கூடாது என்று பத்தியம் சொல்லவேண்டும். ஏனென்றால் வாழைப்பழமும் எலுமிச்சை பழமும் சேர்ந்தால் மருந்து வேலை செய்யாது. எலுமிச்சை பழத்தை மூலப்பொருளாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட மருந்து கொடுக்கும் வைத்தியர், பப்பாளிப் பழம் சாப்பிடக் கூடாது என்று பத்தியம் சொல்ல வேண்டும். ஏனென்றால் எலுமிச்சை பழமும் பப்பாளி பழமும் சேர்ந்து சாப்பிட்டால் மருந்து வேலை செய்யாது. இப்பொழுது உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நம்புகிறேன். இப்படிக்கு. ஹீலர் பாஸ்கர். PH : 8870666966. 5 - 9 .பிப்ரவரி. 2020. 5 நாள் வகுப்பு. சென்னை. அம்பத்தூர்.
Мой аккаунт