சாமிதோப்பு அய்யா வைகுண்ட சுவாமி தலைமைப்பதியில் தேரோட்டம்
У вашего броузера проблема в совместимости с HTML5
#SAMITHOPPU #VAIKUNDASAMI
கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்ட சுவாமி தலைமைப்பதியில் வைகாசித் திருவிழா கடந்த மாதம் 24-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா தொடர்ந்து 11 நாட்கள் நடைபெற்றது. பதினொன்றாம் திருவிழாவான தேரோட்டம் நடைபெற்றது. தேரோட்டத்தை முன்னிட்டு அதிகாலை முத்திரி பதமிடுதலும் தொடர்ந்து திருநடை திறத்தலும், அய்யாவுக்கு பணிவிடையும் நடைபெற்றது. மதியம் தலைமைப்பதி பள்ளி அறையில் இருந்து அய்யா பல்லக்கு வாகனத்தில் தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட பஞ்சவர்ண தேரில் அய்யா கொலுவீற்றிருக்க தேரோட்டம் துவங்கியது. காவி உடை அணிந்து தலைப்பாகை அணிந்த அய்யாவழி பக்தர்கள் அய்யா சிவ சிவா அரகரா அரகரா என்று பக்தி கோஷமிட்டவாறு தேரை வடம் பிடித்து இழுத்தனர். முத்து குடைகள் முன்செல்ல திருத்தேர் கீழரத வீதி, தெற்குரதவீதி , மேற்கு ரத வீதி வழியாக வடக்கு ரத வீதியில் தலைமைப்பதியின் வடக்கு வாசல் பகுதிக்கு வந்தது. அங்கு பக்தர்கள் அய்யாவுக்கு தேங்காய், பழம், பூ, பன்னீர் ஆகிய பொருட்களை சுருளாக படைத்து வழிபட்டனர். தேரோட்ட நிகழ்ச்சியில் பல மாவட்டங்களைச் சேர்ந்த அய்யா வழி பக்தர்கள் கலந்து கொண்டனர். தேரோட்டத்தை முன்னிட்டு சுவாமிதோப்பிற்கு சிறப்பு பஸ் வசதிகள் செய்யப்பட்டிருந்தன. இதனையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.